சென்னை-சேலம் விமான சேவை… மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கியது!

சென்னை - சேலம் விமான சேவை
சென்னை - சேலம் விமான சேவை

சென்னை - சேலம் இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கியது.

சென்னை – சேலம் இடையே இயக்கப்பட்டு வந்த விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனிடையே சென்னை – சேலம் இடையேயான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் தினசரி சேவையை தொடங்க முன்வந்துள்ளது. சென்னையில் இருந்து காலை 11.20க்கு புறப்படும் விமானம் பகல் 12.30க்கு சேலம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம்
விமானம்

ஏற்கனவே கடந்த அக்டோபர் 16ம் தேதி பெங்களூரு-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் முதல்கட்டமாக விமான சேவை இயக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை - சேலம் இடையிலான விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in