பஞ்சாப் பணிந்தது: பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை அறிவித்தது

எதிர்க்கட்சி மாநிலங்களில் தொடரும் பாஜக போராட்டம்
பஞ்சாப் பணிந்தது: பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை அறிவித்தது

எதிர்க்கட்சிகளின் நெருக்கடி காரணமாக பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரிக் குறைப்பை இன்று(நவ.7) அறிவித்தது.

சரண்ஜித் சிங்
சரண்ஜித் சிங்

தீபாவளியை ஒட்டி மத்திய அரசு, கலால் வரிக் குறைப்பின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளைக் குறைத்து அறிவித்தது. வாட் வரி குறைப்பின் மூலம் மேலும் எரிபொருள் விலையைக் குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி, பாஜக ஆளும் மாநிலங்களில் உடனடியாக எரிபொருள் விலைக் குறைப்பை அறிவித்தன. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் இறங்கி வரவில்லை.

குறிப்பாக உட்கட்சி மோதலில் தடுமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் அரசு, எதிர்க்கட்சிகளின் கடும் தாக்குதலுக்கு ஆளானது. பாஜக மற்றும் சிரோமனி அகாலிதள் கட்சிகள், வாட் வரி குறைப்பை வலியுறுத்தி சனியன்று ஆளும் காங்கிரஸை வறுத்தெடுத்தன. மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வேறு நெருங்குவதால், எரிபொருள் விலைக் குறைப்பை அறிவித்து முதல்வர் சரண்ஜித் சிங் ஞாயிறன்று உத்தரவிட்டார்.

அதன்படி பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.5 விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் பஞ்சாப்பில் அமலுக்கு வருகின்றன.

பஞ்சாப் வழியில் இதர எதிர்க்கட்சி மாநிலங்களிலும், ஆளும்கட்சிக்கு எதிரான போராட்டங்களை பாஜகவினர் அறிவித்து வருகின்றனர். தமிழகத்தில் வாட் வரி குறைப்பின் மூலம் எரிபொருள் விலையைக் குறைக்கக் கோரி பாஜக சார்பிலான போராட்டம் நவ.10 அன்று நடைபெறும் என அதன் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in