தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எத்தனை?: களமிறங்கிய டிஜிபி அலுவலகம்!

ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால்
ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

சென்னை டிஜிபி அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு தேர்தல் பிரிவு அதிகாரியாக ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை டிஜிபி அலுவலகம்
சென்னை டிஜிபி அலுவலகம்

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலான பணி இடமாற்றம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை காவல்துறையில் இதுவரை 90 சதவீதம் பணியிட மாற்ற பணிகள் முடிந்துள்ளது.

மேலும் காவல்துறையும் தேர்தல் பணிகளைத் தொடங்கியதை அடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு பொறுப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் பிரிவில் 30 போலீஸார் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.

தேர்தல்
தேர்தல்

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குசாவடிகள் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தோடு இணைந்து கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தேர்தல் பணிக்காக வெளிமாநிலத்தில் இருந்து வரும் காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் வருகை மற்றும் சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் ஆயுதப்படை போலீஸார் குறித்து கண்காணிக்கும் அதிகாரியாக ஏடிஜிபி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே இதே போன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in