நாளை பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 1,450 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்

நாளை பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 1,450 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (ஜூன் 13) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று 1,450 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

கோடை விடுமுறை முடிந்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் ஒருவாரத்திற்குப் பாடங்களுக்குப் பதிலாக புத்துணர்ச்சிப் பயிற்சிகள் வழங்கப்படும் என கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதனால் மாணவ, மாணவிகளும் பள்ளிக்குச் செல்ல ஏதுவாக உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

வழக்கமாகவே அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விசேஷக் காலங்களின்போது கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வெளியூர்களுக்குச் சென்றிருப்போர் தங்கள் பணியிடங்கள், ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக இந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் இன்று ஒரே நாளில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில், சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் வழக்கமான பேருந்துகளை விடவும், இன்று 1,450 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in