மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் பயணித்தால் நடவடிக்கை

ரயில்வே ஊழியர்களுக்கு எச்சரிக்கை
மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் பயணித்தால் நடவடிக்கை

மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் பயணிக்கும் ரயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையின் சென்னை கோட்ட பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை புறநகர் பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பயணிப்பதற்காக தனி ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படுகின்றன. அந்த பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் தவிர மற்றவர்கள் பயணிக்க அனுமதி இல்லாத நிலையில், கடந்த சில நாட்களாக மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகளில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து பயணித்து வருவதாக புகார்கள் எழுந்தது. மேலும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கடந்த மாதம் 28 ஆம் தேதி தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பு தங்களுக்காக ஒதுக்கப்படும் ரயில் பெட்டிகளில் ரயில்வே ஊழியர்கள் பயணிப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கோட்ட பாதுகாப்பு ஆணையர்  உத்தரவு
சென்னை கோட்ட பாதுகாப்பு ஆணையர் உத்தரவு

இந்நிலையில் ரயில்வே பாதுகாப்புப் படையின் சென்னை கோட்ட பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் ரயில்வே ஊழியர்கள் பயணித்தால் அவர்களை வெளியேற்றி ரயில்வே சட்டம் பிரிவு 155 (b)-ன் கீழ் நடவடிக்கை எடுத்து 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த குறித்த விவரத்தை அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் தெரியபடுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x