குடையோட கிளம்புங்க... சென்னை உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

குடையோட கிளம்புங்க...  சென்னை உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Updated on
1 min read

இன்று காலை 10 மணி வரை சென்னை உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஐந்தாவது சுற்று வடகிழக்கு பருவமழை நேற்று இரவு முதல் தொடங்கும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தபடி இன்று காலை டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாளை (டிச. 16) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in