5 மணி நேரம் விமானம் தாமதம்… சென்னையில் 172 பயணிகள் தவிப்பு!

ஜசீரா விமானம்
ஜசீரா விமானம்

சென்னையில் இருந்து குவைத் செல்ல வேண்டிய ஜசீரா  பயணிகள் விமானம் 5 மணி நேரம் தாமதம் ஆனதால் 172 பயணிகள் அவதி அடைந்தனர்.

குவைத்தில் இருந்து சென்னைக்கு அதிகாலை 1:20  மணிக்கு வரும் ஜசீரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் அதிகாலை 2:05  மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு குவைத் செல்லும்.

இந்நிலையில் இன்று அந்த விமானத்தில் 172 பயணிகள், குவைத்துக்கு செல்ல இருந்தனர். பயணிகள் அனைவரும் இரவு 11 மணிக்கு முன்னதாகவே, சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தனர்.

பயணிகள் தயாராக இருந்த நிலையில், குவைத்தில் இருந்து, அதிகாலை 1:20 மணிக்கு வர வேண்டிய விமானம் சென்னைக்கு வரவில்லை. நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும், குவைத்துக்கே திரும்பி சென்றது தெரியவந்தது.

எனவே விமானம் தாமதமாக வந்து, தாமதமாக குவைத்துக்கு திரும்பச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் குவைத் செல்லும் 172 பயணிகள் சென்னையில் விமான நிலையத்தில் காத்திருந்து கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் குவைத்தில் இருந்து ஜசீரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை 6  மணிக்கு சென்னை வந்தது. நீண்ட நேரம் காத்திருப்பில் சோர்ந்திருந்த 172 பயணிகளும் ஒருவழியாக புறப்பட்டுச் சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in