பரபரப்பான 8 மணி நேரம்.. 17 வயது சிறுவனின் வாழ்கையை மாற்றிய சிகிச்சை!

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் குழு
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் குழு

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அவசர அறுவை சிகிச்சை மூலம் பலத்த காயமடைந்த 17 சிறுவன் மறுபிறவி எடுத்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கமுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவனை அவரது உறவினர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இதில் சிறுவனின் முகத்தில் பலத்த ஏற்பட்டுள்ளது. மேலும் மூச்சு விடமுடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில், அதிக ரத்தப்போக்குடன் உடனடியாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர்கள் அச்சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அன்றைய தினம் பிற்பகலில் தொடங்கி சுமார் எட்டு மணி நேரம் தொடர்ந்து அவசர அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

மீனாட்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு முதுநிலை நிபுணர் டாக்டர் நாகேஸ்வரன், பல் மற்றும் மாக்ஸில்லோ ஃபேஷியல் அறுவை சிகிச்சைத் துறை முதுநிலை நிபுணர் டாக்டர் ஜிப்ரீல் ஓய்சுல், பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் டாக்டர் பினிட்டா ஜெனா உள்ளிட்ட பல்துறை மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவமனை மேலாளர் டாக்டர் கண்ணன் ஆகியோர் மருத்துவ நிபுணர்கள் குழுவினரின் முழு ஒத்துழைப்புடன் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு சிறுவனை காப்பாற்றினர். மேலும் சிறுவனின் உயிரை மட்டுமின்றி, அவரது முகத்தோற்றம் மற்றும் முழு உடல் இயக்கத்தையும் மீட்டெடுத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சுமார் ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு, சிறுவன் நேற்று முழுமையாக குணமடைந்தார். முகத்தில் ஒரு தழும்பு கூட இல்லாமல் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in