‘தமிழகத்தில் 85 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு’ - மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

‘தமிழகத்தில் 85 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு’ - மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

தமிழகத்தில் தொடர் தடுப்பூசிகளினால் 85 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் இன்று மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற சிறப்பு முகாமினை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் அதிகளவில் முகாம்கள் நடத்தி தடுப்பூசிகள் செலுத்தியுள்ளோம். இதனால் 85 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் கரோனா தடுப்பூசி முகாம்களையும் மா.சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in