கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள்... வெளியானது முக்கிய அறிவிப்பு!

திருவண்ணாமலை
திருவண்ணாமலை
Updated on
2 min read

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23ம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

புதியதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு சந்தை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால், அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கிளாம்பாக்கம் வரையில் சென்று திருவண்ணாமலை பேருந்துகளில் ஏறி பயணிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை தமிழக போக்குவரத்து துறை ஏற்றுக் கொண்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்

மேலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23ம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை, திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர்.

போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும்.

அரசு பேருந்துகள்
அரசு பேருந்துகள்

மேலும், சென்னை-கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 44 பேருந்துகள், ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும். இந்த பேருந்து வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!

ஓடுபாதையில் விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!

கையில் கட்டுடன், கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

பெரும்பான்மை கிடைக்கலைன்னா பாஜகவின் ‘பிளான் பி’ என்ன? - அமித் ஷா அட்டகாச பதில்!

அஞ்சலி கொலையில் திடீர் திருப்பம்... ஓடும் ரயிலிலிருந்து குதித்த குற்றவாளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in