அரசுப் பேருந்தால் உயிரிழந்த 8 மாத பெண் குழந்தை

அரசுப் பேருந்தால் உயிரிழந்த 8 மாத பெண் குழந்தை

மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்து உரசிய விபத்தில் தாயுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

மயிலாடுதுறை அருகே மூவலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி தனது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே மேலையூரில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக இன்று தனது இரண்டு பெண் குழந்தைகளான சஹானாவையும் (3), பவின்சிகாவையும் (8 மாத குழந்தை) அழைத்துக்கொண்டு அவரது தந்தை நடராஜனுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பினார்.

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் மல்லியம் என்ற இடத்தில் செல்லும் போது பின்பக்கமாக வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தை முந்தி செல்லும்போது பேருந்து உரசியதில் இவரகள் சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

இதில் நடராஜனுக்குத் தலையில் லேசான காயமும், புவனேஸ்வரிக்கு காலில் காயமும் ஏற்பட்டது. மூன்று வயது குழந்தை சஹானா தூரப் போய் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், 8 மாத கைக்குழந்தையான பவின்சிகா பேருந்துக்கு அடியில் விழுந்தது. அதனால் குழந்தை மீது அரசு பேருந்து சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 வாகனம் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த குழந்தை பவுன்சிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in