தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்கள் பலவற்றிலும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை ஓய உள்ளதால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மிதமான மழையும் பெய்து வரும் நிலையில் சென்னையில் சூறாவளி காற்றுடன் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இதனிடைய சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நாளை மறுநாள் முதல் 8ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மற்றும் 6ம் தேதிகளில் தெற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
புரட்டாசியில் பெருமாளையும், தாயாரையும் இப்படி வழிபட்டால் தரித்திரம் விலகும்!
சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி ஆவேசம்!
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!