மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்து விபத்து... 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

மேட்டூர் அனல் மின் நிலையம்
மேட்டூர் அனல் மின் நிலையம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளதால், 600 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு பிரிவுகளில் மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்படுகிறது.

மேட்டூர் அனல் மின் நிலையம்
மேட்டூர் அனல் மின் நிலையம்

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின்வாரியத்திற்கு வழங்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மேட்டூர் அனல் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் தற்போது ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அனல் மின் நிலையம்
மேட்டூர் அனல் மின் நிலையம்

விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து மின் உற்பத்தி துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாலும், காற்றாலை மின்சாரமும் கைகொடுத்து வருவதால், இந்த உற்பத்தி பாதிப்பு காரணமாக மின்விநியோகத்தில் தடை ஏற்பட வாய்ப்பில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

அதிர்ச்சி... 4 மாதங்களில் 430 கொலைகள்... கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது... அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in