6 ஒப்பந்தங்கள்... ரூ.6,100 கோடி முதலீடு... 14,700 வேலைவாய்ப்புகள்

6 ஒப்பந்தங்கள்... ரூ.6,100 கோடி முதலீடு... 14,700 வேலைவாய்ப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய், அபுதாபி பயணத்தின்போது 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 14,700 வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

துபாய், அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை சென்று திரும்பினார். இந்நிலையில், துபாய், அபுதாபி நிறுவனத்துடன் தமிழக அரசு 6 ஒப்பந்தங்கள் செய்துள்ளன. அதன்படி, இரும்பு தடவாளங்கள் சார்ந்த நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் ரூ.100 கோடியிலும், ஜவுளித்துறையை சார்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனத்துடன் ரூ.500 கோடியிலும், மருத்துவத்துறையை சார்ந்த ஏஸ்டர் ஏஎம் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் ரூ.500 கோடியிலும், உணவுத்துறையை சார்ந்த டிரான்ஸ்வேர்டு நிறுவனத்துடன் ரூ.100 கோடியிலான மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

சரக்குப் போக்குவரத்துத் துறையை சார்ந்த ஷராப் என்ற நிறுவனத்துடன் ரூ.500 கோடியிலும், உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் கட்டுமானத்துறையின் லுலு நிறுவனத்துடன் ரூ.3,500 கோடியிலும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். ரூ.6.100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் மூலம் 14,700 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.