இஎஸ்ஐயில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க அக்.30 கடைசி நாள்!

சென்னை இஎஸ்ஐயில் வேலைவாய்ப்பு
சென்னை இஎஸ்ஐயில் வேலைவாய்ப்பு

சென்னையில் உள்ள இஎஸ்ஐ அலுவலகத்தில் காலியாக உள்ள 56 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30ம் தேதி ஆகும்.

சென்னையில் உள்ள இஎஸ்ஐ அலுவலகத்தில் இசிஜி டெக்னீசியன், ஜூனியர் ரேடியோகிராபர் உள்ளிட்ட 56 பணியிடங்கள் காலியாக உள்ளது. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பாணை சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. இசிஜி டெக்னீசியன் பணியிடத்திற்கு 2 ஆண்டு டிப்ளமோ பிரிவில் இசிஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஜூனியர் ரேடியோகிராபர் பணிக்கு 2 ஆண்டு டிப்ளமோ ரேடியோகிராபி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சென்னை இஎஸ்ஐ மருத்துவமனை
சென்னை இஎஸ்ஐ மருத்துவமனை

ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பை சயின்ஸ் பாடங்களுடன் முடித்து டிப்ளமோ மெடிக்கல் லெபாரட்டரி டெக்னாலஜிஸ்ட் படித்து இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். ஓ.டி., உதவியாளர் பணிக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பாக 32 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.21,800 முதல் ரூ.92,300 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 30ம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள https://www.esic.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in