கரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்குத் திருமணம்: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்குத் திருமணம்: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கரோனா முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், 511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் 2020 மார்ச் மாதம் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் அரசால் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டது. கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், மக்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊரிலேயே தங்க நேரிட்டது. வீட்டிலேயே மக்கள் அடைந்து கிடந்த நிலையில் வீட்டிலிருந்த பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தினருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அப்படி ஏற்பட்ட நெருக்கடியில் கரோனா முதல் அலையின் போது மட்டும் 511 பள்ளி மாணவிகளுக்குத் திருமணம் நடைபெற்றது தற்போது தெரிய வந்துள்ளது. இதைக் கண்டறிந்து அந்த மாணவிகள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2021-22 கல்வி ஆண்டில் இடைநிற்றலில் ஈடுபட்ட 18 வயதிற்குட்பட்ட மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 18 வயதிற்கு உள்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு வீடு வாரியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஆய்வில் 511 பள்ளி மாணவிகளுக்குத் திருமணம் ஆனது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in