உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தர்மபுரி மாவட்டம் பாலவாடியில் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு 5 லட்ச ருபாய் நிவாரண உதவித்தொகை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு குழாய் அமைக்க கெயில் நிறுவனத்தினர் கடந்த மூன்று நாட்களாக நில அளவை செய்துவருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரியப்பனஹள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி கணேசன் தன் நிலம் பறிபோய்விடும் என தன் நிலத்தில் உள்ள மரத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கணேசனின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்திருப்பதோடு, தன் பொதுநிவாரண நிதியில் இருந்து 5 லட்ச ரூபாய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்பட்டுவரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றத் தோழனாக இருக்கும்' எனத் தமிழக அரசு குறிப்பிட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in