சென்னையில் 41 மின்சார ரயில்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி

மின்சார ரயில்
மின்சார ரயில்

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் முன் அறிவிப்பின்றி மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்று 41 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி சென்னை காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - கடற்கரை ஆகிய வழித்தடங்களில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முழுவதுமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in