4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்கோப்புப் படம்

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும். இதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இருந்தும் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் மணமேல்குடியில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in