சீஷெல்ஸ் தீவில் குமரி மீனவர்கள் 33 பேர் கைது

சீஷெல்ஸ் தீவில் குமரி மீனவர்கள் 33 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 33 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் சீஷெல்ஸ் தீவில் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22 ஆம் தேதி, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்டம், பூத்துறை, சின்னத்துறையை சார்ந்த குக்ளின், சுனில், ஜெனிஷ் ஆகியோருக்கு சொந்தமான இன்பேன்ட் ஜீஸஸ், டொணோ, ஸ்நாபக அருளப்பர் என்ற விசைப்படகுகளில் மொத்தம் 33 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

பலத்த காற்று வீசியதால் கடலுக்குள் திசைமாறி சென்றதாக கூறப்படும் இம்மீனவர்களை நேற்று சீஷெல்ஸ் படையினர் பிடித்து மூன்று விசைப்படகுகளையும் ஓட்டிவந்த கேப்டன்களை காவல்நிலையத்திலும், மற்ற 30 மீனவர்களை தங்களது விசைப்படகுகளிலும் தங்கவைத்துள்ளனர். இம்மீனவர்களின் உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவர்களது படகுகளையும் இம்மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய அரசுக்கும் தமிழக, கேரள அரசுகளுக்கும் சீஷெல்ஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி வேண்டுகோள் வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in