மலைக்கோட்டை மாநகர் யாருக்கு? திமுகவை நெருக்கும் முக்கிய தலைவர்கள்!

திருச்சி
திருச்சி

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக, காங்கிரஸ், மதிமுக கட்சிகளை சேர்ந்த 3 முக்கிய தலைவர்கள் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நட்சத்திர வேட்பாளரான திருநாவுக்கரசர் அதற்கு தகுந்தாற்போல் வெற்றி பெற்றதோடு சரி. அதன் பிறகு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கக் கூட நேரடியாக செல்லவில்லை என தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

காங்கிரஸ் எம்பி - திருநாவுக்கரசர்
காங்கிரஸ் எம்பி - திருநாவுக்கரசர்

இந்நிலையில், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் திருச்சியை இந்த முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கக் கூடாது. திமுகவே நேரடியாக போட்டியிட வேண்டும் என திருச்சி திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திருநாவுக்கரசர் தொகுதி பக்கம் தலைகாட்டாததால் மக்களிடம் தங்களால் பதில் சொல்ல இயலவில்லை என்றும் திருநாவுக்கரசர் மீண்டும் போட்டியிட்டால் அது எதிர்மறையாக அமைந்துவிடும் என்றும் குற்றம்சாட்டினராம்.

தவிர, திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை, எம்பி தேர்தலில் களமிறக்க வேண்டும் என நேருவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஏனெனில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஐ.பெரியசாமி போன்ற திமுக சீனியர்கள் தங்கள் வாரிசுகளை கட்சியிலும், ஆட்சியிலும் பதவிக்கு கொண்டு வந்துவிட்டனர்.

மு.க.ஸ்டாலின், அருண் நேரு, கே.என்.நேரு
மு.க.ஸ்டாலின், அருண் நேரு, கே.என்.நேரு

தங்கள் தலைவரும் அருண் நேருவை பதவிக்கு கொண்டு வர வேண்டும் என நேரு ஆதரவாளர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு திருச்சி மாவட்டம், சுற்று வட்டாரங்களில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளின் போஸ்டர்கள், கட்-அவுட்டுகளில் அருண் நேருவை புரமோட் செய்து வருகின்றனர்.

தற்போது மக்களவைத் தேர்தல் வந்து விட்டதால் அவரை கட்சிக்குள்ளும், எம்பி-யாக கொண்டு வருவதற்கு இதுவே சரியான தருணம் என நேரு ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

துரை வைகோ, வைகோ
துரை வைகோ, வைகோ

ஒருவேளை இந்த முறையும் திருச்சியை கூட்டணி கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கும்பட்சத்தில் அருண் நேரு, பெரம்பலூரில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. எப்படியும் இந்த முறை அருண் நேருக்கு நிச்சயம் சீட் உறுதி என நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

அதே வேளையில் மதிமுக தலைவர் வைகோ மகன் துரை வைகோ, தான் போட்டியிடுவதற்கு திருச்சியை கேட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2004ல் மதிமுக சார்பில் எல்.கணேசன் திருச்சியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, திருச்சியை கைப்பற்ற மதிமுக தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருச்சி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டால், காங்கிரசின் திருநாவுக்கரசர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in