தமிழ்நாட்டில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தீவிரம்... அரசுப் பள்ளிகளில் 3,00,167 மாணவர்கள் சேர்ப்பு!

தமிழ்நாட்டில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தீவிரம்... அரசுப் பள்ளிகளில் 3,00,167 மாணவர்கள் சேர்ப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் அது  3 லட்சத்தைக் கடந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வழக்கத்தைவிட ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 4 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை இலக்கை கொண்டு பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. 

வரும் கல்வியாண்டில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு வசதிகளை அரசு பள்ளிகளில் கொண்டு வர இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை,  மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் 7.5  சதவீத இட ஒதுக்கீடு என பல்வேறு சலுகைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கு என்ன மாதிரியான நலத் திட்டங்கள் கிடைக்கும், அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசின் திட்டங்கள், அவர்களின் திறனை வளர்க்க உள்ள விஷயங்கள் உள்பட பல்வேறு தகவல்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் கடந்த 1-ம் தேதி முதல் இன்றுவரை அரசு பள்ளிகளில்  3,00,167 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 92.29 சதவீத மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   வருகிற 30-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் இலக்கான 4 லட்சத்தை எட்டிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in