அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம்

மழை
மழை
Updated on
1 min read

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவடைய உள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருப்பூர், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னர் அறிவித்திருந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in