நீலகிரி மலை ரயில் பாதை அருகில் கொட்டப்பட்டிருந்த 2,387 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!

நீலகிரி மலை ரயில் பாதை அருகில் கொட்டப்பட்டிருந்த 2,387 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!

ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்த உத்தரவைக் கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரிய வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, தெற்கு ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊட்டி செல்லும் நீலகிரி மலை ரயிலில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கொண்டுசெல்ல தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பதிலாகத் தண்ணீர் கேன்கள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நீலகிரி மலை ரயில் பாதையில் கொட்டப்பட்டிருந்த 2,387 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ரயில் பாதையில், யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் முழுமையாக இடிக்கப்பட்டு, கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 18-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in