பாதுகாக்க வழிவகுக்கிறது: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை எழுதிய 217 கைதிகள்!

பாதுகாக்க வழிவகுக்கிறது: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை எழுதிய 217 கைதிகள்!

தமிழக சிறைசாலையில் இந்தாண்டு 9901 சிறைவாசிகள் கல்வி பயின்று வருவதாகவும், 217 சிறைவாசிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுவதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.

சிறைவாசிகள் பெரும்பாலானோர் கல்வியறிவு அற்றவர்களாகவும், ஏழை மற்றும் சமூகத்தின் அடித்தள மட்டத்திலிருந்து வந்திருப்பதால் சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறை சிறை வாசிகளுக்கு கல்வி வழங்க முன்னுரிமை அளித்து வருகிறது. சிறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்த மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில், கல்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சிறைவாசிகளை தவறான பாதைக்கு வழிநடத்தும் கடுங்குற்றவாளிகளிடமிருந்து சிறைவாசிகளை பாதுகாக்க வழிவகுக்கிறது. தமிழ்நாடு அரசின் கல்வித் துறையும், ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், ஒருங்கிணைந்து சிறைவாசிகளின் அடிப்படை கல்வித்தகுதிக்கேற்ப பல்வேறு கல்வி திட்டங்களை செயல்படுத்தியுள்ளன.

விடுதலைக்குப் பின்னர் சிறைவாசிகள் இலாபகரமான பணிகளில் ஈடுபடும் வண்ணம் அவர்களை தயார்படுத்தும் நோக்கில் பல்வேறு கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மத்திய சிறைச்சாலைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்டச் சிறை (ம) பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் ஆரம்பப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்டச் சிறை (ம) பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகாத்மா காந்தி சமுதாய கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு அரசு செலவில் அஞ்சல்வழி கல்வி வசதி வழங்கப்பட்டு வருகிறது. தகுதி பெற்ற சிறைவாசிகளைக் கொண்டு சிறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

2021-2022-ம் ஆண்டில் 340 பெண் சிறைவாசிகள் உட்பட மொத்தம் 9,901 சிறைவாசிகள் பல்வேறு பாடப்பிரிவுகளைத் தொடர்ந்து பயின்று வருகின்றனர். 4833 தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் அடிப்படை ஆயத்தப் படிப்பையும், 3928 மற்றும் அடிப்படைக் கல்வி 7ஆம் வகுப்பு வரை ஆயத்த படிப்பும், 555 சிறைவாசிகள் பல்வேறு இளங்கலை, முதுகலை பட்டபடிப்புகள் மற்றும் பட்டயப்படிப்பு - சான்றிதழ் படிப்புகளை பயின்று வருகின்றனர். 585 சிறைவாசிகள் 8, 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை பயின்று, அரசு செலவில் பொதுத் தேர்வுகளை எழுதவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

2021-2022-ம் கல்வி ஆண்டில் வெவ்வேறு சிறைகளை சேர்ந்த 16 பெண் சிறைவாசிகள் உட்பட மொத்தம் 217 சிறைவாசிகள் நேற்று (6-ம் தேதி) தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் கோரிக்கையின் படி, சிறைவாசிகள் அந்தந்த சிறையிலேயே தேர்வு எழுதிடும் வகையில், மாநில பள்ளிக் கல்வித்துறையால் 8 மத்திய சிறைகள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.