தருமபுரியில் தொடரும் தீண்டாமை.... கொட்டாங்குச்சியில் தேநீர் தந்த 2 பெண்கள் கைது!

கம்பைநல்லூர் காவல் நிலையம்
கம்பைநல்லூர் காவல் நிலையம்

மொரப்பூர் அருகே கூலி வேலைக்காகச் சென்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாமியார், மருமகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது
கைது

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ஆர்.கோபிநாதம்பட்டியை அடுத்துள்ள போளையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டியல் சமூக பெண்கள், மாரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரது நிலத்தில் விவசாய வேலைக்குச் சென்றனர். அப்போது கூலி வேலைக்கு வந்த பெண்களுக்கு தோட்டத்தின் உரிமையாளர்கள் கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்துள்ளனர்.

மேலும், தோட்டத்தின் உரிமையாளருக்கு மட்டும் சில்வர் டம்ளரில் தேநீர் கொடுத்துள்ளனர். இதை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால் பாதிக்கப்பட்ட செல்லி (50) என்ற பெண், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் போலீஸார், கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த தரணி, அவரது மாமியார்‌ சின்னதாயி என்பவரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவர் மீதும் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 - ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் இரட்டைக்குவளை முறை தொடர்பாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in