தமிழகத்தில் அடுத்தடுத்து 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

தமிழகத்தில் அடுத்தடுத்து 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!
Updated on
1 min read

காலையில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாலையில் கோவை, ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 11 ஐஏஎஸ் மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகளை இன்று காலை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரித்துறை ஆணையராக ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமனம். கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அச்சு மற்றும் எழுதுபொருள் துறை ஆணையராக சோபனா நியமிக்கப்பட்டுள்ளார். திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமனம். தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, மாலையில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ் உயர்கல்வித்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரகுமான் ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார் சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சி திட்ட அதிகாரி எல்.மதுபாலன் மதுரை மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், சென்னை வடக்கு மண்டல துணை ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன் கோவை மாநகராட்சி ஆணையராகவும், தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சி திட்ட அதிகாரி தாகரே சுபம் தியாந்தியோராவ் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராகவும், கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராகவும், பொள்ளாட்சி சார் ஆட்சியர் எஸ்.பிரியங்கா திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும், ஓசூர் சார் ஆட்சியர் ஆர்.சரண்யா கடலூர் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சி கூடுதல் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in