சென்னையில் மட்டும் 14 லட்சம் பேர் கரோனா தடுப்பூசியே போடவில்லை!

இன்று நடக்கும் முகாமைப் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசிகோப்புப் படம்

சென்னையில் இன்னும் 14 லட்சம் பேர் இரு தவணை கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணிக்குத் தொடங்கின. இன்று இரவு 7 மணிவரை இந்த முகாம்கள் நடக்கின்றன. தமிழகத்தில் இதுவரை 1.45 கோடிபேர் முதல் இரு தவணை, பூஸ்டர் டோஸ் செலுத்தாமல் உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் முதல் இரு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களே 13 லட்சத்து 72 ஆயிரத்து 219 பேர் உள்ளனர்.

சென்னையில் இத்தனை பேர் முதல் இரு தவணை தடுப்பூசிகளே போடாத நிலையில் அவர்களின் பட்டியலை சேகரித்துள்ளது சுகாதாரத் துறை. மொத்தமுள்ள 200 வார்டுகளிலும், வார்டுக்கு 17 தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை மாநகருக்கு மட்டும் 1,600 சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in