தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில்... வானிலை மையம் தந்த மகிழ்ச்சியான அறிவிப்பு!

மழை
மழை

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெயில்
வெயில்

வெயிலால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களைத் தயாராக வைத்திருக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்தன. அதோடு தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி கத்தரி வெயில் தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை என 25 நாட்களுக்கு இந்த வெயில் நீடிக்க உள்ளது. கத்தரி வெயில் காலத்தின் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை
மழை

இப்படிப்பட்ட நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயில் கொளுத்திவரும் வானிலை மையத்தின் மழை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in