12 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் தணிந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதனால் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று காலையில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னையில் அடுத்த இருதினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு, 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 12 மாவட்டங்களுக்கு மிதமான மழை பொழியும். அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, குமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in