233 பொருள்களின் பெயர்களை அசால்ட்டாக சொல்கிறார்: சாதனை படைத்த 11 மாத கன்னியாகுமரி குழந்தை!

233 பொருள்களின் பெயர்களை அசால்ட்டாக சொல்கிறார்: சாதனை படைத்த 11 மாத கன்னியாகுமரி குழந்தை!

முழுதாக ஒரு வயதுகூட ஆகாத 11 மாதக் குழந்தை தன் திறமையால் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் பாகோடு தேனாம்பாறையைச் சேர்ந்தவர் பெறில் ஹெர்மன். இவரது மனைவி பியான்ஷா. இவர்களது குழந்தை தான் அற்றி ஹெர்மன். இந்தக் குழந்தைக்கு இன்னும் ஒருவயது கூட ஆகவில்லை. இப்போது 11 மாதங்களே ஆகும் குழந்தை அற்றி ஹெர்மன், வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் 233 பொருட்களின் பெயரை பெற்றோர் சொல்ல, சொல்ல எடுத்துக்கொடுத்து அசத்துகிறார்.

மிகக்குறைந்த வயதில் 233 பொருள்களை சரியாக அடையாளம் கண்டு எடுத்துக்கொடுக்கும் இந்தக் குழந்தையின் பெயர் வேல்ட் ரிக்கார் ஆப் லண்டன், இண்டர்நேஷல் புக் ஆப் ரிக்கார்ட், கலாம் வேல்டு ரெக்கார்ட்ஸ், ஜாக்கி புக் வேல்டு ரெக்கார்ட் என பல்வேறு சாதனை புத்தகங்களிலும் இடம்பிடித்துள்ளது.

இதுகுறித்து குழந்தையின் தந்தை பெரில் ஹர்மன் கூறுகையில், “நான் கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் உள்ள அப்பல்லோ டயர்ஸில் வேலை செய்துவருகிறேன். நானும் என் மனைவி பியான்ஷாவும் தான் குழந்தைக்கு இந்தப் பயிற்சியைக் கொடுத்தோம். இப்போது 233 பொருள்களை எடுத்துக்கொடுக்கும் குழந்தைக்கு அடுத்ததாக 195 நாடுகளின் கொடியைக் காட்டினால் எது எந்த நாட்டின் கொடி எனச் சரியாக எடுத்துக்கொடுக்கும் பயிற்சி நடக்கிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in