10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரையும், 11-ம் வகுப்புக்கு மே 9-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு மே 6-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. அண்மையில் 10, 11, 12-ம் வகுப்பு பொது தேர்விற்கான ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஹால் டிக்கெட்டை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ஏற்கெனவே குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்றும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பாடத்திட்டத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை இயக்குநர் இன்று அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.