ஒரு ரேஷன் கடைக்கு இனி 1,000 கார்டுதான்: அமைச்சர் அறிவிப்பு

ஒரு ரேஷன் கடைக்கு இனி 1,000 கார்டுதான்: அமைச்சர் அறிவிப்பு

"ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது" என்று சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர்களின் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, பகுதி நேர ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை பிரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது.

சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஒரே ரேஷன் கடைகளில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் இருக்கிறது. எங்கெல்லாம் பிரிக்க வேண்டிய தேவை இருக்கிறதோ, அங்கெல்லாம் கடைகள் பிரிக்கப்படும். ஒரு முழு நேர ரேஷன் கடை அமைக்க ரூ.3 லட்சம் செலவாகும் சூழலில், சொந்த கட்டிடங்களும் கட்டப்பட வேண்டிய தேவை இருக்கிறது. உணவுத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையுடன் ஆலோசித்து, விரைவாக பணிகள் தொடங்கப்படும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in