10 பேர் பாதிப்பு: ஐஐடி மாணவர்களை அச்சுறுத்துகிறது கரோனா

10 பேர் பாதிப்பு:  ஐஐடி மாணவர்களை அச்சுறுத்துகிறது கரோனா

சென்னையில் உள்ள இந்திய தொழிற்நுட்ப கழகத்தில் ( ஐஐடி) 3 பேருக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் லேசான அறிகுறிகளுடன் இருப்பதால் அவர்களுக்கும் தொற்று உறுதியானது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கரோனாவால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிதாக 2,047 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 25-க்கும் பேருக்கும் கீழே இருந்த கரோனா எண்ணிக்கை இந்த வாரம் 25-க்கும் அதிகமாகியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 30 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பொது இடங்களில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்பதுடன் தடுப்பூசி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் 3 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 7 பேருக்கு லேசான அறிகுறிகளுடன் இருப்பதால் அவர்களுக்கும் கரோனா தொற்று உறுதியானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இதன் காரணமாக பீதியடைந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா தாக்கம் குறைந்திருந்த நிலையில், சென்னையில் அது மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.