`சிந்துவின் மனவலிமையை பாருங்கள்'- மருத்துவ செலவை ஏற்பதாக முதல்வர் அறிவிப்பு

`சிந்துவின் மனவலிமையை பாருங்கள்'- மருத்துவ செலவை ஏற்பதாக முதல்வர் அறிவிப்பு

விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்! என்று கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள வித்யோதயா பெண்கள் பள்ளியில் மாணவி சிந்து படித்து வருகிறார். கைபந்து வீராங்கனையாக இருந்து வந்த சிந்து, கடந்த 2020-ம் ஆண்டு எதிர்பாராத விதமாக 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில், அவருக்கு கால், முகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. 10 அறுவை சிகிச்சைகள் வரை சிந்துவுக்கு செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்திற்கு பிறகு அவர் படுத்த படுக்கையானார். இருப்பினும் கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புதல் பெற்று தற்போது நடைபெறும் பொதுத்தேர்வில் உதவியாளர் ஒருவரின் உதவியுடன் பிளஸ்2 தேர்வை எழுதி வருகிறார் சிந்து. "நான் மறுபடியும் நடக்கத் தொடங்கினால் கைப்பந்து விளையாட்டை விளையாட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் மாணவி சிந்துவின் வலிமையை பாராட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், " 'வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!' கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்! மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்!" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in