
எனது மகனைக் கிரிக்கெட் வீரராக்க விரும்பவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக விளையாடிய மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் யுவராஜ் சிங்கும் ஒருவர். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அவர் மொத்தம் 304 ஒருநாள், 40 டெஸ்ட் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதில் இவரது பங்களிப்பில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பையையும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. அதேபோல், இங்கிலாந்திற்கு எதிரான நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் முகமது கைப்புடன் இணைந்து இவர் ஆடிய ஆட்டம் இதுநாள் வரையிலான சிறந்த போட்டியாக கருத்தப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்து மனம் திறந்து பேசியுள்ள யுவராஜ் சிங், மகனை கிரிக்கெட் வீரராக்க விரும்பவில்லை என்றார். ஏனெனில் தற்போது கிரிக்கெட் வீரர்களின் பிள்ளைகள், கிரிக்கெட்டிற்குள் வந்தால் பெரும் அழுத்தத்தை சந்திக்கிறார்கள். அதிலும், தந்தையுடன் ஒப்பிட்டு மீடியாவும், ரசிகர்களும் கொடுக்கும் அழுத்தம் அவர்களால் தாங்க முடியாததாக இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், தனக்கு கோல்ப் விளையாட பிடிக்கும் என்பதால், தனது மகனுக்கு கோல்ப் உபகரணங்கள் வாங்கிக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மகனுக்கு அது சார்ந்த பயிற்சி அளித்து வருவதாக கூறும் யுவராஜ், மெல்ல மெல்ல தனது மகன் அந்த விளையாட்டை கற்றுக்கொண்டு வருவதாக கூறினார். அதேநேரம், தனது மகன் கிரிக்கெட்டராக வர விரும்பினால், அதற்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங், ஹேசல் கீச் என்ற நடிகையை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அந்த தம்பதிக்கு 2 வயதில் ஓரியன் என்ற மகனும், ஆரா என்ற 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!