நியூசிலாந்துக்கு ஷாக் கொடுக்குமா ஆப்கான்?... சென்னையில் இன்று உலகக்கோப்பை போட்டி!

கேன் வில்லியம்சன், ஹஸ்மதுல்லா ஷாஹிதி
கேன் வில்லியம்சன், ஹஸ்மதுல்லா ஷாஹிதி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டி இன்று பிற்பகல் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் எதிர்கொள்கிறது.

இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மைதானம் கான்வாய் மற்றும் சண்ட்னர் ஆகியோருக்கு பரிட்சையம் என்பதால் அவர்களின் அதிரடி ஆட்டம் தொடரும் என்பதால், அந்த அணி ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியா, வங்களாதேசம் அணிகளிடம் தோற்றாலும் ஆப்கானிஸ்தான் அணி - இங்கிலாந்து அணியுடனான லீக் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று நடப்பு சாம்பியனுக்கே அதிர்ச்சி அளித்தது. அதே உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் அணி களிமிறங்க உள்ளது.

சென்னை மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு இது சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in