ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10வது லீக் ஆட்டம் இன்று லக்னோவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி 13 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வியடைந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் களமிறங்கியுள்ளது. இலங்கையுடனான முதல் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்புடன் விளையாடி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...