அரையிறுதி ரேஸில் முந்தப்போவது யார்?... நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை!

தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து
தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் நடைபெற உள்ள 32-வது போட்டியில் நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது. 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதேநேரம், தொடரின் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து கடைசியாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இதனால், 8 புள்ளிகளுடன் அந்த அணி 3வது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒரு தோல்வி கூட அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பைக் கேள்விக்குள்ளாக்கலாம். அதேநேரம் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை தென்னாப்பிரிக்கா நெருங்கிவிடும். அதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in