வெளியேறப்போவது யார்? முக்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து- இலங்கை பலப்பரீட்சை!

இலங்கை - இங்கிலாந்து மோதல்
இலங்கை - இங்கிலாந்து மோதல்

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளின் உலகக் கோப்பை தொடரின் தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கிய போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் 25 லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் - இலங்கையும் அணியும் மோதுகின்றன. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை, 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதேபோல் இலங்கையும் 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இன்றயை போட்டியே இரு அணிகளுக்குமான கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இதில் தோல்வியை சந்திக்கும் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேற நேரும். அதனால், இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும். அதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இலங்கை அணியின் கேப்டன் தசன் ஷனகா காயம் காரணமாக விலகிய நிலையில் தற்போது வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவும் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது அணியில்ஏஞ்சலோ மேத்யூஸ் இணைந்துள்ளார். ஆனாலும், அந்த அணி இங்கிலாந்திற்கு கடும் சவாலாகவே விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in