சாதனை படைக்குமா இந்தியா? நெதர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

சாதனை படைக்குமா இந்தியா? நெதர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை தொடரின் 45வது போட்டி இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே பெங்களுருவில் இன்று நடைபெறுகிறது. கடைசி லீக் போட்டியான இது பகலிரவு ஆட்டமாக சின்னசாமி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி
இந்திய அணி

உலக கோப்பை கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி நெகர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.

நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

விளையாடிய 8 போட்டிகளிலும் வென்று கெத்தாக வலம் வரும் இந்தியா, நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி அனைத்து லீக் போட்டிகளிலும் வென்ற அணி என்ற புதுமையான சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவை தோற்கடித்து ஆறுதல் வெற்றியை படைக்கும் முனைப்போடு நெகர்லாந்து அணி ஈடுபடும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in