உலகக்கோப்பை கிரிக்கெட்... நடப்பு சாம்பியனுடன் இன்று மோதும் தென்னப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணி கேப்டன்கள்.
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணி கேப்டன்கள்.

இன்று பிற்பகல் நடைபெற உள்ள முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் அந்த அணி இரண்டில் தோல்வியடைந்துள்ளது. அதிலும் ஆப்கானிஸ்தானுடனான படுதோல்வியில் இருந்து அந்த அணி மீள இன்றைய வெற்றி உதவும்.

அதேநேரம், ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளை துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா கத்துக்குட்டியான நெதர்லாந்திடம் வீழ்ந்தது. இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி மீண்டும் அந்த அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in