உலகக் கோப்பை கிரிக்கெட்... டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

உலகக் கோப்பை
உலகக் கோப்பை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு தொடங்குகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 40 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்து இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்னும் ஐந்து லீக் போட்டி மட்டுமே இருக்கும் நிலையில், அந்த 4வது அணி எது என்பதில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் எதிர்பார்த்து இருக்கின்றன.

இந்த நிலையில், மும்பையில் வரும் 15ம் தேதி முதல் அரையிறுதியும், கொல்கத்தாவில் 16ம் தேதி இரண்டாவது அரையிறுதியும், அகமதாபாத்தில் 19ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு புக் மை ஷோ இணையதளத்தில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

கனமழை... இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

உஷார்... இன்று முதல் இந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது!

தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்... சரக்கு போக்குவரத்து கடும் பாதிப்பு!

நெகிழ்ச்சி! சகோதரனின் குழந்தையை பெற்றெடுத்த பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in