இன்று பைனல்... இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வெல்லுமா...? ரசிகர்கள் ஆவல்!

இந்திய அணி
இந்திய அணி
Updated on
1 min read

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த நிலையில் இந்தியா பதக்கம் வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

இந்திய அணி
இந்திய அணி

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. முதல் அரையிறுதியில் வங்கதேசத்துடன் நேற்று மோதிய இந்தியா, டாஸ் வென்று பந்துவீசியது. இந்திய ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் களமிறங்கிய இந்தியா 9.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன் எடுத்து அபாரமாக வென்றது

2வது அரையிறுதியில் ஆப்கானிஸ்தானுடன் மோதிய பாகிஸ்தான் 18 ஓவரில் 115 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 17.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்து வென்று பைனலுக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் தங்கப் பதக்கத்துக்காக மோதுகின்றன. அதற்கு முன்பாக வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தியா தங்கம் வெல்லுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்..

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in