கண்களெல்லாம் அகமதாபாத் நோக்கியே... நடக்கப் போவது என்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

இந்திய ஆஸ்திரேலிய கேப்டன்கள்
இந்திய ஆஸ்திரேலிய கேப்டன்கள்

50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் மூன்றாவது முறையாக இந்தியா கோப்பையை வெல்லுமா என்கிற கேள்வியுடன் போட்டியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை முதன் முதலில் வென்றதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அதன் பிறகு இந்தியா மீண்டும் உலகக் கோப்பை வெல்ல 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

கடந்த 2011ல் ரசிகர்களால் கேப்டன் கூல் என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையை வென்றது. 

அதனை கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணித்து அவருக்கு பிரியாவிடை அளித்தது. அதன் பிறகு 12 ஆண்டுகள் கடந்த நிலையில் 3 வது முறையாக உலக சாம்பியன் மகுடம் சூடும் கனவுடன், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை எதிர்கொள்கிறது.

கடந்த 2003ம் ஆண்டில் கங்குலி தலைமையிலான இந்திய அணியின் கனவை ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தகர்த்தது. அதற்கு இந்த போட்டியில் இந்தியா பதிலடி தருமா என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கிரிக்கெட்டில் இந்தியா ஜாம்பவானாக திகழ்வது விளையாட்டு மட்டுமின்றி பிராந்திய அரசியல் அரங்கிலும் இந்தியாவின் செல்வாக்கை உயர்த்துவதற்கு காரணமாக அமைகிறது என்றே செல்லலாம்.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியை நேரில் காண இந்திய பிரதமர் நரேந்திர மோடி மைதானத்துக்கு வர உள்ளார். மேலும் இந்திய விமானப்படையினர் மைதான பகுதியில் சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். இந்தியாவுக்கு உலகக்கோப்பைகளை வென்று தந்த கேப்டன்களான கபில்தேவ், மகேந்திர சிங் தோனி ஆகியோரும் பார்வையாளர் மாடங்களிலிருந்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

மொத்தத்தில் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு மற்றும் அரசியலாளர்களின் பார்வை, நாளை இந்தியாவின் அகமதாபாத் மைதானத்தில் தான் இருக்கும். பாலிவுட் இசையமைப்பாளர் பிரீத்தம், பாடகி ஜோனிட்டா காந்தி, பின்னணி பாடகர் ஆதித்யா காத்வி ஆகியோர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நடைபெற உள்ளது. மேலும் மும்பையிலிருந்து 500 நடன கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இப்போட்டியை மைதானத்தில் 1.30 லட்சம் ரசிகர்களும், உலகம் முழுவதுமிருந்து 1.39 பில்லியன் ரசிகர்கள் வீடுகள் மற்றும் பிற இடங்களிலிருந்து தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசிக்க உள்ளனர். உலகக்கோப்பை இறுதிப்போட்டி வந்துவிட்ட நிலையில் சிறுவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கிரிக்கெட் ஜூரம் இன்றே தொற்றிக்கொண்டுள்ளது.


இதையும் வாசிக்கலாமே...


நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!

நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!

பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in