சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றிப் பயணம் தொடருமா? டெல்லியுடன் இன்று பலப்பரீட்சை

டெல்லி - சென்னை அணிகள் இன்று மோதல்
டெல்லி - சென்னை அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று இரவு டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பான ஃபார்மில் உள்ளது. அதே நேரத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் தனது முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் மோதுகின்றன.

டெல்லி அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கும், அணியின் இயக்குநராக சவுரவ் கங்குலியும் இருந்தாலும், வீரர்கள் தேர்வில் டெல்லி அணி கோட்டைவிட்டுவிட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸையும், இரண்டாவது ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸையும் தோற்கடித்து வலுவான நிலையில் உள்ளது.

குஜராத் - ஹைதராபாத் போட்டி
குஜராத் - ஹைதராபாத் போட்டி

டெல்லி கேப்பிடல்ஸ் முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தி்ல பஞ்சாப் கிங்ஸிடமும், இரண்டாவது ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியை கண்டுள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி கணக்கை தொடங்குமா என டெல்லி அணியின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைஸர் அணியும் மோதுகின்றன.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி தனது முதல் லீக் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வி கண்டது. அடுத்தப் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. குறிப்பாக மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் ஒரு தோல்வி, ஒரு வெற்றியை பெற்றுள்ளன. எனவே, இன்றையப் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, பேட் கம்மின்ஸின் ஹைதராபாத் படையை வீழ்த்துமா என கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in