ஆப்கானிஸ்தான் அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட உள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கரை தங்கள் முகாமுக்கு அழைத்து வந்தார் அஜய் ஜடேஜா. சச்சின் டெண்டுல்கர், ஆப்கானிஸ்தான் வீரர்களை தனித்தனியாக அழைத்து சில ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் மற்றும் அஜய் ஜடேஜாவுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டார்.
ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி 8 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெறும் நோக்கத்தில் ஆப்கன் அணி ஆர்வமாக உள்ளது. ஆனால், அந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என்ற வலுவான இரண்டு அணிகளை சந்திக்க உள்ளது.
இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணி அதற்கான திட்டமிடலில் நேற்று ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா, அதிரடியாக சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்தார். அவர் ஆப்கன் அணியின் வீரர்களை தனித்தனியே சந்தித்து ஆலோசனை வழங்கினார். மேலும் வீரர்களுடன் சச்சின் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு போட்டியிடும் அணிகளுள் ஒன்றாக இருப்பதால், இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மிக முக்கியமான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆப்கன் அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா என்பது இன்று தெரியும்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்