சிகேஎஸ் கேப்டனிலிருந்து தோனி விலக என்ன காரணம்?

சிகேஎஸ் கேப்டனிலிருந்து தோனி விலக என்ன காரணம்?

2008-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீட்டித்து வந்த தோனி, 15-வது ஐபிஎல் போட்டியில் கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 முதல் ஆண்டு தோறும் 20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இம்முறை ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் உட்பட 8 அணிகளோடு கூடுதலாக அகமதாபாத், லக்னோ ஆகிய 2 அணிகள் இணைக்கப்பட்டிருகின்றன.

இந்நிலையில், 15-வது ஐபிஎல் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவிடம் அந்த பதவியை ஒப்படைப்பதாக தோனி அறிவித்துள்ளார். கேப்டன் பதவியை மட்டும் கொடுத்திருப்பதாகவும், சிஎஸ்கே அணியில் விளையாடுவதை தொடர்வார் என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டு முதல் மகேந்திரசிங் தோனி சிஎஸ்கேவுக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். தோனி மொத்தம் 220 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 4746 ரன்களை அடித்துள்ளார். திடீரென கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருந்தாலும் அணியில் இருக்கிறார் என்பது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in