உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?: நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள்
நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள்

முதல் முறையாக நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை போட்டியில் இன்று மோதவுள்ளன. இரு அணிகளும் அரையிறுதி செல்லும் முனைப்பில் இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது பார்க்கப்படுகிறது.

 நெதர்லாந்து
நெதர்லாந்து

உலகக் கோப்பை தொடரின் 34வது போட்டி நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே லக்னோவில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி மதியம் 2 மணிக்கு ஏகானா மைதானத்தில் தொடங்குகிறது.

சிறப்பாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான், இந்த உலகக் கோப்பை தொடரில் எதிரணியிடம் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் அணியாகவும் இருந்து வருகிறது. பவுலிங்கை காட்டிலும் பேட்டிங்கில் வலுவான அணியாக இருந்து வரும் ஆப்கானிஸ்தான் இரண்டு போட்டிகளை சேஸிங்கில் வெற்றி பெற்றுள்ளது.

விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்பையும் பெறலாம். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கான ரேஸில் முன்னேற்றம் பெறுவதற்கான முக்கிய போட்டியாக நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்டார் வீரரான ரஷித் கான், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை உலகக் கோப்பை தொடரில் இதுவரை வெளிப்படுத்தாமல் உள்ளார். எனவே அவரது தனது பார்மை இன்றைய போட்யில் மீட்பார் என எதிர்பார்க்கலாம்

இதையடுத்து நெதர்லாந்து விளையாடி 6 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. உலகக் கோப்பை 2023 தொடரில் உச்சகட்ட பார்மில் இருக்கும் தென் ஆப்பரிக்காவை வீழ்த்திய ஒரே அணியாக நெதர்லாந்து உள்ள நிலையில், கடந்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை விட்டு நாக்அவுட் செய்தது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

நெதர்லாந்து அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு என்பது குறைவு என்றாலும், இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து அதுவும் அமைய வாய்ப்பு உள்ளது. மிக முக்கியமாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு வாய்ப்பை உறுதிப்படுத்தி கொள்ளவும் நெதர்லாந்து அணிக்கு வெற்றி முக்கியமானதாக அமைகிறது என்பதால் இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in