கொழும்பில் வெளுத்து வாங்கும் மழை... இந்தியா - பாகிஸ்தான் போட்டி பாதியிலேயே நிறுத்தம்!

கொழும்பில் வெளுத்து வாங்கும் மழை... இந்தியா - பாகிஸ்தான் போட்டி பாதியிலேயே நிறுத்தம்!

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் மழையின் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான்

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியதால், ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்து வந்தது. மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தொடர்ந்து நடக்குமா என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், லேசான மழைதான் என்பதால் ஆட்டம் தொடர்ந்து வந்த நிலையில் கனமழை பெய்யத் தொடங்கியதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in